Lev Yashinன் சிறந்த கோல்கீப்பர் விருது. July 10, 2006
Posted by Elango in புள்ளிவிபரம்.add a comment
இத்தாலியின் கோல்கீப்பர் Gianlugi Buffon இந்த ஆண்டிற்கான சிறந்த கோல்கீப்பர் விருதை பெறுகிறார்.
technorati tags:உலகக்கோப்பை-2006, கால்பந்து
FIFA Fair Play விருது July 10, 2006
Posted by Elango in புள்ளிவிபரம்.1 comment so far
FIFA தொழில் நுட்பகுழு இந்த போட்டித்தொடரின் சிறந்த அணிகளாக பிரேசில், ஸ்பெயின் அணிகளை தேர்வு செய்திருக்கிறது.
இரண்டாவது சுற்றிற்கு தகுதி பெற்ற அணிகள் பங்கேற்கும் இந்த விருதிற்கு அணிகளின் பின்வரும் காரணிகளை பார்த்தபின் தேர்வு செய்யப்படுகிறது.
- அணி பெற்ற மஞ்சள், சிகப்பு அட்டைகள்
- எதிரணி வீரர்களை மதித்து பழகும் பண்பு
- விளையாட்டை நியாமான ஆக்ரோஷத்துடன் அனுகியமுறை
- நடுவர் மற்றும் மற்ற அலுவலர்களிடம் காட்டிய நட்புறவு
- அணியின் பயிற்சியாளர் மற்றும் மற்றைய அலுவலர்களின் நடைமுறை
- இந்த அணியின் ரசிகர்கள் காட்டிய பண்பாடு
technorati tags:உலகக்கோப்பை-2006, கால்பந்து
உலகக்கோப்பை-2006 விருதுகள் July 10, 2006
Posted by Elango in புள்ளிவிபரம்.add a comment
அதிக கோல்கள் அடித்த வீரருக்கான தங்க காலணி விருது
இந்த தொடரில் 5 கோல் அடித்துள்ள ஜெர்மனியின் Miroslav Klose தங்க காலணி விருதை பெறுகிறார்.

இரண்டாவது இடத்தை அர்ஜென்டினாவின் Hernan Crespo பெற்றார்.

சென்ற வருடத்தின் தங்ககாலணியை பெற்ற பிரேசிலின் ரொனால்டோ இந்த வருடம் மூன்றாவது சிறந்த வீரராக தேர்வு பெற்றார்.
technorati tags:உலகக்கோப்பை-2006, கால்பந்து
உலகக்கோப்பை 2006 சிறந்த வீரருக்குகான விருதுகள் July 10, 2006
Posted by Elango in புள்ளிவிபரம்.add a comment
சிறந்த வீரருக்குகான விருதுகள்:
தங்கப்பந்து: Zinedine Zidane
உலகக்கோப்பையின் சிறந்த வீரராக பிரஞ்சு கேப்டன் Zidane தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார். இறுதிப்போட்டியின் இடைவேளையில் நடைபெற்ற ஓட்டெடுப்பில் அதிகவாக்கு பெற்று தங்கபந்திற்கு பெறுகிறார்.
வெள்ளிப்பந்து: Fabio Cannavaro

வெண்கல பந்து: Andrea Pirlo

technorati tags:உலகக்கோப்பை-2006, கால்பந்து
இத்தாலியின் பயணம் July 10, 2006
Posted by Elango in போட்டிகள்.add a comment

இந்த போட்டித்தொடர் தொடங்கியபோது இத்தாலி வெற்றிபெரும் என யாரும் கூறியிருந்தால் நான் சிரித்திருப்பேன். இத்தாலியின் கால்பந்து அணி ஒரு நல்ல அணிதான் தவிர உலகக்கோப்பையை வெல்லும் திறன் இருந்ததாக நான் அப்போது நினைக்கவில்லை. இந்த அணி உலகக்கோப்பையை 1934, 1938 மற்றும் 1982ஆம் அண்டுகளில் வென்றுள்ளது. 1994ஆம் ஆண்டு இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. கடந்த உலகக்கோப்பையில் இரண்டாவது சுற்றிலேயே தென்கொரியாவிடம் தோற்று வெளியேறியது.
போட்டித்தொடர் துவங்கும்முன் இத்தாலியின் பிரபலமான உள்நாட்டு கால்பந்து அணிகளுக்கு (Juventus, Lazio, Fiorentina மற்றும் AC Milan) எதிரான ஊழல் குற்றச்சாட்டு பெரியதாக எழுந்தது. அனேகமாக இந்த குற்றச்சாட்டின் தீர்ப்பு இத்தாலியின் கால்பந்து விளையாட்டின் கட்டமைப்பையே வீழ்த்திவிடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. உலகக்கோப்பை அணியின் 22 வீரர்களில் பாதிபேர் இந்த பிரபல அணிகளில் விளையாடுபவர்கள் தான். எனவே பாதிவீரர்களின் எதிர்காலம் கேள்விக்குரியாக இருந்த தருணத்தில் உலகக்கோப்பைக்கு வந்தார்கள். 1982வது ஆண்டில் இந்த அணி உலகக்கோப்பை வென்றபோதும் இதே போன்ற ஒரு அசாதாராண சூழ்நிலை இத்தாலியில் இருந்ததை இணையத்தில் இன்று சிலர் நினைத்துப் பார்க்கிறார்கள். ;-/
கானா, செக்குடியரசு மற்றும் அமெரிக்காவுடன் E பிரிவில் விளையாடிய துவங்கிய இத்தாலி தனது முதல் சுற்றில் கானா மற்றும் செக்குடியரசு அணிகளை வென்றது. அமெரிக்காவுடனான தனது முதல் சுற்றில் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது. இந்த போட்டியில் இத்தாலியின் Zaccardo தானே அடித்துக்கொண்ட சொந்தகோலினால் தான் அமெரிக்கா டிரா செய்யமுடிந்தது.
முதல் சுற்று E பிரிவு:
| அணி | போட்டிகள் | புள்ளிகள் | கோல் | கோல் வித்தியாசம் |
| இத்தாலி | 3 | 7 | 5:1 | 4 |
| கானா | 3 | 6 | 4:3 | 1 |
| செக்குடியரசு | 3 | 3 | 3:4 | -1 |
| அமெரிக்கா | 3 | 1 | 2:6 | -4 |
இரண்டாவது சுற்று – அதிர்ஷ்டத்தின் பங்கு:
இரண்டாவது சுற்றின் நாக்அவுட் போட்டியில் ஆஸ்ரேலியாவை சந்தித்தது இத்தாலி. ஆட்டத்தின் பெரும்பான்மையான நேரத்திற்கு ஆஸ்ரேலியா அணி சிறப்பாக விளையாடியது. இரண்டாவது பாதி துவங்கிய சிறிது நேரத்தில் இத்தாலியின் Marco Materazzi சிகப்பு அட்டை பெற்று வெளியேறினார். (இவர் மேல்தான் நேற்று Zidane மோதி சிகப்பு அட்டை பெற்று வெளியேறினார்). இரண்டாவது பாதி முழுவதும் 10வீரர்களுடன் விளையாடிய இத்தாலி ஆஸ்ரேலியாவை கோல் ஏதும் அடிக்கவிடாமல் சிறந்த தடுப்பாட்டம் ஆடியது. ஆட்டம் முடிய 1 நிமிடமிருந்த நிலையில் இத்தாலிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்தி கால்இறுதிக்கு தகுதிபெற்றது.
முதல் இரண்டு சுற்றிலும் இத்தாலியின் ஆட்டம் மிகவும் சாதாரணமாகதான் இருந்தது. வழக்கம் போல் இவர்களின் தடுப்பாட்டம் சிறப்பாக தான் இருந்தது. ஒரே ஒரு கோல் அதுவும் இவர்களே அடித்துக்கொண்டது. வேறு எந்த அணியினரும் இத்தாலிக்கு எதிராக கோல் அடிக்கவில்லை. ஆனால் கால்இறுதியிலும், அரையிறுதியிலும் இத்தாலியின் ஆட்டம் மிகச்சிறப்பாக இருந்தது.
கால்இறுதி
இத்தாலி கால்இறுதிப்போட்டியில் உக்ரைன் அணியை சந்தித்தது. இத்தாலியின் அதிரடி ஆட்டம் இந்த போட்டியில் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது. இத்தாலி 3-0 கோல் கணக்கில் உக்ரைன் அணியை வென்றது. இத்தாலி 3 கோல்கள் வித்தியாசத்தில் ஜெயித்து நான் பார்த்ததில்லை. இந்த போட்டியில் உக்ரைன் அணியின் அனுபவமின்மையை சரியாக பயன்படுத்தி இத்தாலி வீரர்கள் அதிரடியாக வென்று அரையிறுதிக்கு வந்தனர்.
அரையிறுதி
அரையிறுதியில் ஜெர்மனியை சந்தித்தது இத்தாலி. உலகக்கோப்பையில் சிறப்பாக ஆடிவந்த ஜெர்மனியை நீட்டிக்கப்பட்ட ஆட்டநேரத்தின் கடைசி நிமிடத்தில் அதிர்ச்சியான வகையில் இரண்டு கோல்கள் அடித்து வென்றது. கால்இறுதிவரை சிறப்பாக விளையாடிவந்த ஜெர்மன் அணி இத்தாலியை எளிதாக வென்றுவிடும் என்றே எல்லோரும் கணித்தனர். ஆனால் இத்தாலி ஜெர்மனியின் அதிரடி ஆட்டத்தை திறமையான தடுப்பாட்டத்தின் மூலம் சமாளித்தனர். முழுமையான ஆட்டநேரத்தில் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காமல் சமநிலையில் இருந்தனர். ஆட்டம் பெனால்டி ஷாட்களுக்கே செல்லும் என்ற நிலையில் இத்தாலி தங்களுக்கு கிடைத்த கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி ஒரு கோல் அடித்தனர். மீதி இருந்த ஒரு நிமிடத்தில் சமன்செய்யும் அவசியத்தில் விளையாடிய ஜெர்மன் அணியின் பதற்றத்தை பயன்படுத்தி இத்தாலி இன்னொரு கோல் போட்டு 2-0 என்று வென்றது.
இறுதிப்போட்டி
நேற்று நடந்த இறுதிப்போட்டியில் இரு அணிகளும் கோல் ஏதும் இல்லாமல் ஆட்டம் பெனால்டி ஷாட்களுக்கு சென்றது. உலகக்கோப்பை வரலாற்றில் இத்தாலிக்கு மறக்க முடியாத பெனால்டி தருணங்கள் உண்டு. இதுவரை இந்த அணி பெனால்டி மூலம் வென்றதே இல்லை. ஆனால் பிரஞ்சு அணியின் கோல்கீப்பரின் திறமையை பார்த்தபின் இன்று இத்தாலி பெனால்டியில் வெல்லும் வாய்ப்பியிருந்ததாக நேற்றிரவு பதிவு செய்தேன். பிரஞ்சு அணியின் ஆட்டம் நேற்று சிறப்பாக இருந்தாலும் Zidaneன் அவசரத்தால் இத்தாலியிடம் தோற்றது. பெனால்டி அடிக்க Zidane இல்லாத பிரஞ்சு அணி தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை இத்தாலிக்கு தாரைவார்த்தது.
technorati tags:உலகக்கோப்பை-2006, கால்பந்து
Zidaneக்கு சிகப்பு அட்டை July 10, 2006
Posted by Elango in கால்பந்து.8 comments

நீட்டிக்கப்பட்ட நேரம் முடிய 10 நிமிடங்கள் இருக்கும் போது Zidane பந்து இத்தாலி அணியின் கைக்கு சென்றபின் தன்னுடைய இடத்திற்கு திரும்பினார். அவருக்கு அருகே இத்தாலியின் Marco Materazzi நடந்துவருகிறார். இருவருக்கும் இடையே எதோ வாக்குவாதம். யாருமே எதிர்பார்க்காத வண்ணம் Zidane Materazziயை நெஞ்சில் மோதி கீழே தள்ளினார். அவருடை திறமைக்கும் அனுபவத்திற்கும் இது மிகவும் தகாத செயலாகத்தான் படுகிறது. நடுவர் சிகப்பு அட்டை கொடுக்கிறார்.
ஒரு மிகச்சிறந்த கால்பந்து வீரரின் கடைசி விளையாட்டு நிமிடங்கள் இப்படி முடிந்திருக்கவேண்டாம்.
இத்தாலி வெற்றி July 10, 2006
Posted by Elango in போட்டிகள்.3 comments
நீட்டிக்கப்பட்ட ஆட்டநேரம் 30 நிமிடத்திலும் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காமல் சமநிலையில் இருந்ததால் பெனால்டி ஷாட் வருகிறது.
- இத்தாலி வீரர் Andrea Pirlo தனது அணிக்கான முதல்வாய்ப்பை அடிக்கிறார். கோல் 1-0
- பிரஞ்சு வீரர் Wiltord முதல் வாய்ப்பை கோலாக்கினார். ஸ்கோர் 1-1
- இத்தாலி வீரர் Marco Materazzi இத்தாலிக்கான இரண்டாவது வாய்ப்பை கோல் அடிக்கிறார் 2-1
- பிரஞ்சு வீரர் Trezeguet தனக்கான வாய்ப்பை பயன்படுத்த தவறுகிறார். பந்து கோல் கம்பத்தில் பட்டு திரும்புகிறது. ஸ்கோர் 2-1
- இத்தாலி வீரர் Rossi தனக்கு கிடைத்த வாய்ப்பை தவறாமல் அடிக்கிறார். ஸ்கோர் 3-1
- பிரஞ்சு வீரர் Abidal தனக்கு கிடைத்த வாய்ப்பை அடிக்கிறார். ஸ்கோர் 3-2
- இத்தாலியின் Del Piero கோல் அடிக்கிறார். ஸ்கோர் 4-2
- பிரஞ்சு வீரர் Sagnol கோல் அடிக்கிறார். ஸ்கோர் 4-3
- இத்தாலியின் Grosso இத்தாலியின் ஐந்தாவது வாய்ப்பை கோல் அடித்தார். ஸ்கோர்.
இத்தாலி பெனால்டியில் 5-3 என்று வென்றது.
இறுதிபோட்டியின் ஆட்டநேரம் நீட்டிக்கப்படுகிறது – பிரான்ஸ் 1 – இத்தாலி 1 July 10, 2006
Posted by Elango in போட்டிகள்.add a comment
இரண்டாவது பாதியில் பிரஞ்சு அணியின் ஆட்டம் சிறப்பாக தெரிந்தது. ஆனாலும் கோல் ஏதும் அடிக்கப்படாமல் இரு அணிகளும் சமநிலையிலேயே இருந்ததால் ஆட்டம் நீட்டிக்கப்படுகிறது. இந்த உலகக்கோப்பையை வெல்லவேண்டும் என்றால் பிரான்ஸ் இந்த 30 நிமிடங்களுக்குள் ஒரு கோல் அடிக்கவேண்டும். பெனால்டி ஷாட்களுக்கு சென்றால் அது இத்தாலிக்கே சாதகமாக இருக்கும் என தோன்றுகிறது
ஆட்டநேர இடைவெளியில் பிரான்ஸ் 1 – இத்தாலி 1 July 10, 2006
Posted by Elango in போட்டிகள்.2 comments
7வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி ஷாட் வாய்ப்பை பயன்படுத்தி Zidane முதல் கோல். பிரான்ஸ் 1-0 என்று முன்னிலை.

பிரஞ்சு வீரர் Malouda பந்தை இத்தாலியின் கோல் கம்பத்திற்கு அருகே கொண்டு செல்கிறார். இத்தாலி வீரர்களால் தடுக்கப்பட கிழேவிழுந்து பிரான்ஸ் அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பை பெற்றுத்தருகிறார். பெறுதற்கரிய இந்த வாய்ப்பை அடிக்க Zidane தானே முன்வருகிறார்.
Zidane ஆல் அடிக்கப்பட்ட பந்து கோல் கம்பத்தின் மேல்விளிபில் பட்டு உள்ளே விழுகிறது. பிரான்ஸ் 1-0 என்று முன்னிலை பெறுகிறது.
ஆட்டத்தின் 11வது நிமிடம் பிரஞ்சு வீரர் Willy Sagnol மஞ்சள் அட்டை பெறுகிறார். இத்தாலி அணி சமன்செய்வதற்கான முயற்சிகளை செய்கிறது.
ஆட்டத்தின் 18வது நிமிடம் இத்தாலியின் Marco Materazzi தலையால் முட்டி கோல் அடிக்கிறார். இரு அணிகளும் தலா ஒரு கோலுடன் சமநிலைக்கு திரும்புகின்றன.
உலகக்கோப்பையை வெல்லப்போவது யார் ? July 9, 2006
Posted by Elango in முன்னோட்டம்.add a comment
இன்னும் சில நிமிடங்களில் துவங்கயிருக்கும் இறுதிப்போட்டியின் பரபரப்பு எல்லோரையும் தொற்றியிருக்கும்.
Zidaneக்கு எட்டு வருடங்களில் இரண்டாவது முறையாக உலகக்கோப்பையை ஏந்தும் வாய்ப்பு கிடைக்குமா ?
மனதில் பிரான்ஸ் வெற்றிபெறவேண்டும் என்று விரும்பினாலும். இத்தாலிக்கே வாய்ப்புகள் அதிகமிருப்பதாக தோன்றுகிறது. இன்னும் சற்று நேரத்தில் விடைகிடைத்துவிடும். இரு அணிகளுமே தடுப்பாட்டத்திற்கு பெயர்பெற்றவை. பிரான்ஸோ இத்தாலியோ முதலில் ஒரு கோல் போட்டால் போதும் அதை கொண்டே வெற்றி பெற்றுவிடுவார்கள்.
சிறந்த இளம்வீரராக ஜெர்மனியின் Podolski தேர்வு July 7, 2006
Posted by Elango in புள்ளிவிபரம்.1 comment so far
இந்த உலகக்கோப்பையின் சிறந்த இளம்வீரராக ஜெர்மனியின் Podolski தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். 21 வயதிற்குட்பட்ட வீரர்களுக்கு வழங்கப்படும் இவ்விருதை பெறுவதற்கு போர்ச்சுகலின் கிரிஷ்டியானோ ரொனால்டோ, அர்ஜென்டினாவின் மெஸ்ஸி, ஜெர்மனியின் Podolski, இங்கிலாந்தின் Rooney உள்ளிட்ட 40 வீரர்களுக்கு வாய்ப்பிருந்தது.
இவர்களில் எனது சாய்ஸ் கிரிஷ்டியானோ ரொனால்டோ தான். அர்ஜென்டினாவின் மெஸ்ஸிக்கு இந்த போட்டித்தொடரில் விளையாடும் வாய்ப்பு சரியாக அமையவில்லை. காயம் காரணமாக முதல் சுற்றில் Rooney விளையாடவில்லை. ஆக ரொனால்டோவிற்கே வாய்ப்பு பிரகாசமாக இருந்ததாக நினைத்தேன்.
Podolski தான் விளையாடிய 6 போட்டிகளில் 3 கோல் அடித்தார். இவர் அடித்த 3 கோல்களைவிட தன்னுடன் விளையாடிய முன்கள வீரர் Kloseவுடன் இணைந்து நடத்திய ஜெர்மனியின் தாக்குதல்கள் இவரை முன்னிறுத்தியிருக்கும் என நினைக்கிறேன். ஆனால் போர்ச்சுகலின் ரொனால்டோ சிறப்பாக விளையாடியிருந்தாலும் ஆங்கில மீடியாவில் கிடைத்த சரமாரியான விமர்சனங்களே தேர்வாளர்கள் மனதில் கேள்வியை ஏற்படுத்தியிருக்கும்.
Technorati Tags: உலகக்கோப்பை-2006, கால்பந்து
உலகக்கோப்பையில் இதுவரை July 6, 2006
Posted by Elango in புள்ளிவிபரம்.1 comment so far
| நடத்துள்ள போட்டிகள் | 62 |
| அடிக்கப்பட்ட கோல்கள் | 140 |
| சிகப்பு அட்டைகள் | 27 |
| மஞ்சள் அட்டைகள் | 316 |
| அதிக கோல்கள் அடித்த அணி | இத்தாலி, அர்ஜென்டினா, ஜெர்மனி (11 கோல்கள்) |
| அதிக கோல்கள் பெற்ற அணி | செர்பியா(10 கோல்கள்) |
| குறைந்த கோல்கள் பெற்ற அணி | சுவிஸ் (0 கோல்கள்) |
technorati tags:உலகக்கோப்பை-2006, கால்பந்து
இறுதிபோட்டியில் பிரஞ்சு அணி July 6, 2006
Posted by Elango in போட்டிகள்.2 comments
பிரான்ஸ் 1 – போர்ச்சுகல் 0

33வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி ஷாட் வாய்ப்பை Zidane அடித்து பிரஞ்சு அணியை இறுதி போட்டிக்கு தகுதிபெற செய்தார். விறுவிறுப்பான இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் பிரஞ்சு அணி போர்ச்சுகல் அணியை நேற்று சந்தித்தது. பிரஞ்சு கேப்டன் Zidaneனா (அ) போர்ச்சுகல் கேப்டன் Figoவா ? யார் தங்களது கடைசி உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இத்தாலிக்கு எதிராக விளையாடுவார்கள் ?
ஆட்டம் துவங்கிய முதல் நிமிடத்திலேயே பிரஞ்சு அணி தாக்குதலைத் துவங்கியது. பிரஞ்சு அணியின் Malouda தனக்கு கிடைத்த வாய்ப்பை தவறவிட்டார். முதல் 5 நிமிடங்களிலேயே இரண்டு முறை சோதிக்கப்பட்ட பிரஞ்சு கோல்கீப்பர் Bartez ஆரம்பம் முதலே தடுமாறினார். Bartez நேற்று இருந்த நிலையில் போர்ச்சுகல் கொஞ்சம் முயற்சி செய்திருந்தால் கட்டாயம் கோல் அடித்திருக்கலாம். எத்தனை முறை Bartez கையில் வந்த பந்தை தவறவிட்டார். இந்த போட்டி மட்டும் இறுதியில் பெனால்டி ஷாட்டிற்கு சென்றிருந்தால் கட்டாயம் போர்ச்சுகல் வென்றிருக்கும்.

பிரஞ்சு கோல்கீப்பரை தவிர மற்ற தடுப்பாட்டக்காரர்களும், நடுகள வீரர்களும் சிறப்பாகவே விளையாடினார்கள். ஆட்டத்தின் முதல் கார்னர் வாய்ப்பு பிரஞ்சு அணிக்கே 6வது நிமிடத்தில் கிடைத்தது. கோல் அடிக்கமுடியவில்லை. அடுத்த நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் Maniche பிரஞ்சு கோல் கீப்பரை தாண்டி அடிக்க முடியவில்லை. இப்போதும் Bartez தடுமாறிதான் பந்தை பிடித்தார். போர்ச்சுகல் அணிக்கு முதல் கார்னர் வாய்ப்பு 14வது நிமிடத்தில் கிடைத்தது. கோல் அடிக்க முடியவில்லை.
ஆட்டத்தின் 31வது நிமிடத்தில் பிரஞ்சு அணியின் Henry போர்ச்சுகல் கோல் அருகே அருமையாக பந்தை கொண்டுவருகிறார். போர்ச்சுகல் அணியின் Carvalho அவரை தடுக்க முயல தடுமாறி விழுகிறார் Henry. பெனால்டி ஏரியாவில் விழுந்ததால் பிரஞ்சு அணிக்கு பெனால்டி ஷாட் கிடைக்கிறது. 
கிடைப்பதற்கரிய இந்த வாய்ப்பை Zidane தானே அடிக்க வருகிறார். போர்ச்சுகல் கோல்கீப்பர் Ricardo சரியாக Zidane அடிக்கும் திசையை கணித்தாலும் அவரால் தடுக்க முடியவில்லை. Zidane 1-0 என்று பிரஞ்சு அணியை முன்னிலைப்படுத்துகிறார். 
ஆனால் பிரஞ்சு அணியின் மொத்த விளையாட்டு அவர்களின் முந்தைய இரண்டு ஆட்டங்களை போல் இல்லை (பிரேசிலை வென்றது, ஸ்பெயின் அணியை வென்றது). கேப்டன் Zidane ஒரு கோல் அடித்திருந்தாலும் பிரேசிலுக்கு எதிராக ஆடிய அற்புதமான விளையாட்டு இன்று இல்லை. போர்ச்சுகல் அணி தங்களுக்கு கிடைத்த பல வாய்ப்புகளையும் கோல் அடிக்கமுடியாமல் தவறவிட்டதே அவர்களின் தோல்விக்கு காரணம். பிரான்ஸ்க்கு எதிராக விளையாடி தோற்ற அவர்களின் வரலாறு வீரர்களின் மனதில் இருந்திருக்கலாம்.
போர்ச்சுகல் அணியில் Cristiano Ronaldoவின் ஆட்டம் குறிப்பிட்டு சொல்லும்படி இருந்தது. இரண்டாவது பாதியில் Ronaldoவிடம் பந்து செல்லும் போதெல்லாம் போர்ச்சுகல் ரசிகர்களின் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. இரண்டாவது பாதியில் பிரஞ்சு அணிக்கு Henry மற்றும் Ribery ஆளுக்கு ஒரு வாய்ப்பு உருவாக்கி கொண்டார்கள். ஆனால் கோல் ஏதும் அடிக்கமுடியவில்லை. இப்படி குறிப்பிட்டு சொல்லும் தருணங்களை தவிர பெரும்பான்மையான நேரம் பிரஞ்சு அணி பந்தை கடத்துவதிலேயே செலவிட்டது. முதல் பாதியில் கிடைத்த 1-0 என்ற முன்னிலையே போதும் என்ற மனநிலையில் இருந்ததாக எனக்கு பட்டது. பிரஞ்சு முன்னனி வீரர் Henry ஆட்டத்தின் கடைசி 5 நிமிடங்கள் இருக்கும் போது களத்திலிருந்து வெளியேறுகிறார். அவருக்கு பதிலாக மாற்று ஆட்டக்காரராக Saha இறங்கினார். ஒரு கோல் முன்னிலையில் இருந்தாலும் பிரஞ்சு அணியின் இந்த முடிவு கொஞ்சும் அதிகம் தான்.
Technorati Tags: உலகக்கோப்பை-2006, கால்பந்து
2006 உலகக்கோப்பையில் அதிக கோல்கள் விபரம் July 5, 2006
Posted by Elango in புள்ளிவிபரம்.add a comment
இன்னும் விளையாடிக்கொண்டிருக்கும் 4 அணிகளில் அதிக கோல்கள் யார் அடித்துள்ளார் என்று பார்த்தால் இன்னும் ஜெர்மனியின் Miroslav Klose தான். இவர் இதுவரை 5 கோல்கள் அடித்துள்ளார்.
வீரர்களின் கோல் நிலை:
| அணி | வீரர் | கோல்கள் |
| ஜெர்மனி | Miroslav Klose | 5 |
| பிரான்ஸ் | Henry | 3 |
| ஜெர்மனி | Lukas Podolski | 3 |
| பிரான்ஸ் | Vieira | 2 |
| போர்ச்சுகல் | Maniche | 2 |
technorati tags:உலகக்கோப்பை-2006, கால்பந்து
Technorati Tags: உலகக்கோப்பை-2006, கால்பந்து
இன்றைய போட்டி – போர்ச்சுகல் vs பிரான்ஸ் July 5, 2006
Posted by Elango in முன்னோட்டம்.add a comment
இரவு 12:30 போர்ச்சுகல் vs பிரான்ஸ்

இன்று நடக்கும் மற்றொரு அரையிறுதியில் பிரான்ஸ் போர்ச்சுகல் அணியை சந்திக்கிறது. நேற்று நடந்த முதல் அரையிறுதியில் இத்தாலி ஜெர்மனியை வென்று ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இத்தொடரில் விளையாடிய 5 போட்டிகளையும் வென்றுள்ள போர்ச்சுகல் அணி இதுவரை 6 கோல்களை மட்டுமே அடித்துள்ளது. இவர்களுக்கு எதிராக ஒரே ஒரு கோல் மட்டுமே அடிக்கப்பட்டுள்ளது (முதல் சுற்றில் மெக்ஸிகோ வீரர்கள் அடித்தது). இரண்டாவது சுற்றில் ஹாலந்துக்கெதிரான இவர்களின் ஆட்டம் நிறைய விமர்ச்சிக்கப்பட்டது. அந்த போட்டியில் வழங்கப்பட்ட 16 மஞ்சள் அட்டைகளும் 4 சிகப்பு அட்டைகளும் என்றும் நினைவில் நிற்கும். போர்ச்சுகல் அணி தங்களது கால்இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியைச் சந்தித்தனர். இந்த போட்டியில் முழுநேரத்திலும் கோல் ஏதும் அடிக்காமல் பெனால்டி ஷாட்களில் இவ்வணியின் கோல்கீப்பர் Ricardo தடுத்த 3 பெனால்டி ஷாட்களினால் வென்றனர்.
பிரஞ்சு அணியோ சுனக்கமாக முதல் சுற்றை துவங்கினாலும் இரண்டாவது சுற்றிலும் கால்இறுதியிலும் மிகவும் சிறப்பாக விளையாடினார்கள். முதல் மூன்று போட்டிகளில் இரண்டை டிரா செய்து ஒன்றை வென்று இரண்டாவது சுற்றிற்கு தகுதி பெற்ற பிரஞ்சு அணி தனது இரண்டாவது சுற்றில் ஸ்பெயின் அணிக்கு எதிராக 3-1 என்ற கணக்கில் கம்பிரமாக பெற்ற வெற்றி இந்த அணிக்குள் ஏற்பட்ட மாற்றதிற்கு கட்டியம் கூறியது. அடுத்தபடியாக கால்இறுதியில் தற்போதய சேம்பியன்களான பிரேசிலை வென்றதன் மூலம் இக்கோப்பைக்கு தாங்கள் தகுதியானவர்கள் என நிருபித்தனர்.
இரண்டாவது சுற்றில் பெற்ற தடைகளிலிருந்து வெளிவரும் போர்ச்சுகல் வீரர்கள் Costinha மற்றும் Deco இன்றைய போட்டிகளில் விளையாடுவார்கள். பிரஞ்சு அணியோ தங்களது வெற்றி வீரர்களை மாற்றமாட்டார்கள் என நினைக்கிறேன்.
பிரேசில் நாட்டைச் சேர்ந்தவரன போர்ச்சுகல் கோச் Scolari வழிகாட்டுதலில் விளையாடும் போர்ச்சுகல் அணி கால்பந்து விளையாட்டை ஒரு யுத்தமாகவே பார்கிறார்கள்.

இன்றும் வழக்கம் போல் இவ்வணி 4-5-1 யுத்தி கையாளும் என நினைக்கிறேன். அதுவும் கூடுதலாக Zidaneயை சுற்றியே இவர்களின் வியூகம் இருக்கும்.
Zidaneயை மையமாக கொண்டு வரும் பிரஞ்சு அணியோ கடந்த இரண்டு ஆட்டங்களிலின் மூலம் இவ்வுலகக்கோப்பை தங்களுக்கு சொந்த கொண்டாட தகுதி பெற்றவர்கள் என காட்டியிருக்கிறார்கள். போர்ச்சுகல் அணியின் தாக்குதலை தாக்குபிடித்து விளையாட இவர்களுக்கு 4-4-2 தேவையிருக்கும் என்பது எனது கருத்து. ஆனால் இவர்களும் 4-5-1 என Henryயை முன்வைத்து விளையாடுவது Zidaneயை பாதுகாக்க உதவும்.

பேப்பரில் பார்க்கும் போது போர்ச்சுக்கல் அணி சற்று முன்னே தெரிந்தாலும் எனது வாக்கு பிரஞ்சு அணிக்கே.
Technorati Tags: உலகக்கோப்பை-2006, கால்பந்து